திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த எச்.ராஜா முயற்சி
காழ்ப்புணர்ச்சியோடு திமுக தலைமையிலான கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என பாஜக தேசியச் செயலாளர்
காழ்ப்புணர்ச்சியோடு திமுக தலைமையிலான கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா முயற்சிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து கோவை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக முன்மொழிந்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழிமொழிகிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 3 மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற யுக்திகளை வகுத்து வெற்றி பெற்றுள்ளதால் தகுதியுள்ள தலைவராக ராகுல் காந்தி திகழ்கிறார்.
இந்த வெற்றியை பொருத்துக் கொள்ள முடியாததால் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா விமர்சனம் செய்து வருகிறார். மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பாதுகாப்புக் காரணங்களால் குறிப்பிட்ட சிலர் மட்டுமே மேடையில் அமர அனுமதிக்கப்பட்டனரே தவிர வேறு காரணம் எதுவும் இல்லை. ஆனால், வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியோடு திமுக தலைமையிலான கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்றநோக்கிலேயே எச்.ராஜா வதந்திகளை பரப்பி வருகிறார். அவர் முயற்சி செய்தாலும் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியை சிதறடிக்க முடியாது.
புயலால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்காத பிரதமர் மோடி, நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு செல்கிறார். நடிகர், நடிகைகளுக்கு, தொழிலதிபர்களுக்கு நேரம் கொடுத்து பேச கூடியவர். தமிழக மக்களின் வேதனையைப் பார்த்து ரசிக்கக் கூடிய மனபான்மையை குறித்துதான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார். மேக்கேதாட்டு, ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.