FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மாநகராட்சி பள்ளி மைதானத்தை ஆக்கிரமிக்க முயற்சி: பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

மாநகராட்சிப் பள்ளிக்கு சொந்தமான மைதானத்தை அரசு அதிகாரிகளின் துணையோடு தனிநபர்கள் ஆக்கிரமிக்கும் முயற்சிப்பதை கண்டித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

Updated On : 25 மே 2018, 4:29 am IST
பகிர்:

மாநகராட்சிப் பள்ளிக்கு சொந்தமான மைதானத்தை அரசு அதிகாரிகளின் துணையோடு தனிநபர்கள் ஆக்கிரமிக்கும் முயற்சிப்பதை கண்டித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
கோவை, ஒண்டிபுதூரை அடுத்த சுங்கம் பகுதியில் எஸ்.எம்.எஸ். லே-அவுட் உள்ளது. இங்கு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியின் அருகே உள்ள காலி மனையிடங்கள் லே-அவுட்டாக பிரிக்கப்பட்ட போது, பொது பயன்பாட்டுக்கென 62 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது.
இந்த இடம் பள்ளியின் விளையாட்டு மைதானமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த நிலத்தை தனிநபர்கள் தங்களுக்கு சொந்தமாக்க பத்திரப் பதிவு செய்ய முயற்சித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் எஸ்எம்எஸ் லே-அவுட் நலச்சங்கம் மற்றும் பொது நல அமைப்புகளின் சார்பில் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் வி.தெய்வேந்திரன் கூறியதாவது:
மாநகராட்சி பள்ளி மைதானத்தை தனிநபர்கள், ஆளும் கட்சியினர் அதிகாரிகளின் துணையோடு அபகரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டமாக கொண்டு செல்லும் வகையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments