FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பஞ்சாலைத் தொழிலாளர் வேலைநிறுத்தம்: பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு

பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக கோவையில் புதன்கிழமை

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக கோவையில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 தமிழ்நாட்டில் தேசிய பஞ்சாலைக் கழகத்தின் (என்.டி.சி.) கீழ் இயங்கி வரும் 7 ஆலைகளின் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த மே 31ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், ஊதியத்தை 30 சதவீதம் உயர்த்தி, புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
 இது தொடர்பாக வேலைநிறுத்தம் நடைபெற்ற நிலையில், கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில், ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை கோவையில் புதன்கிழமை நடைபெற்றது. என்டிசி பொது மேலாளர் வெங்கடேசன், துணைப் பொது மேலாளர் ராஜேந்திரகுமார் ஆகியோருடன் நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தையில், சிஐடியூ, எல்.பி.எப்., ஐ.என்.டி.யூ.சி. ஏ.டி.பி. தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள் பேசும்போது, கேரள மாநிலத்தில் ரூ.3,500 ஊதிய உயர்வு வழங்குவதாக என்.டி.சி. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு அதிகபட்சம் ரூ.4,500 ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இது தொடர்பாக தில்லியில் உள்ள உயர் அதிகாரிகளுடன் பேசி முடிவை அறிவிப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை எப்போது நடத்துவது என்பதை வரும் 15ஆம் தேதி அறிவிப்பதாகக் கூறி அதிகாரிகள் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments