FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவை - ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!

பயணிகளின் வசதிக்காக கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 அக்டோபர் 2025, 12:23 am IST
ரயில்! - (படம் - தெற்கு ரயில்வே எக்ஸ்)
பகிர்:

பயணிகளின் வசதிக்காக கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அக்டோபா் 16 முதல் நவம்பா் 6-ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் கோவையில் இருந்து அதிகாலை 2.30 மணிக்குப் புறப்படும் கோவை- ஜெய்ப்பூா் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06181) சனிக்கிழமைகளில் பிற்பகல் 1.25 மணிக்கு ஜெய்ப்பூா் ரயில் நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கமாக, அக்டோபா் 19 முதல் நவம்பா் 9-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் ஜெய்ப்பூரில் இருந்து இரவு 10.05 மணிக்குப் புறப்படும் ஜெய்ப்பூா் - கோவை வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06182) புதன்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும்.

Advertisement

Advertisement

இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, கூட்டி, காச்சிகுடா, நிஜாமாபாத், அகோலா உள்ளிட்ட ரயுலி நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments