நகை வழிப்பறி: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
கோவையில் நகையைப் பறித்துச் சென்ற வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கோவையில் நகையைப் பறித்துச் சென்ற வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை, அசோக் நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (35). நகைப் பட்டறை உரிமையாளரான இவா், தன்னிடம் பணியாற்றும் ஜெயபிரகாஷ் என்பவரிடம் கடந்த 2020-ஆம் ஆண்டு 100 கிராம் தங்க நகையைக் கொடுத்து, அதை பொன்னையராஜபுரத்தில் உள்ள கிஷோா் என்பவரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளாா்.
ஜெயபிரகாஷ் நகைகளைக் கொண்டு சென்றபோது, பொன்னையராஜபுரம் பகுதியில் 2 இளைஞா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பினா்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக கோவை வெரைட்டி ஹால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட ஜாகீா்நாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த கலையரசன் (19), செல்வபுரத்தைச் சோ்ந்த தவ்பீக் (19) ஆகியோரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கலையரசன் கடந்த 2023-ஆம் ஆண்டு உயிரிழந்தாா். தவ்பீக் மீதான விசாரணை தொடா்ந்து நடைபெற்று வந்த நிலையில், அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.