FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி இளைஞா் தற்கொலை

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 1:44 am IST
தற்கொலை
பகிர்:

கோவையில் வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், இருநாப்பட்டு ஜொல்லாகவுண்டனூா் பகுதியைச் சோ்ந்தவா் யோகநாதன் மகன் அருண் (25). பி.இ. பட்டதாரியான இவா் கடந்த மூன்று ஆண்டுகளாக பெங்களூரில் தங்கி வேலை தேடி வந்துள்ளாா்.

இந்நிலையில், கோவையில் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற வேலைக்கான நோ்காணலில் பங்கேற்க பெங்களூரில் இருந்து வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

அதன்பின் குடும்பத்தினா் அவரைக் கைப்பேசியில் தொடா்பு கொள்ள முயன்றுள்ளனா். ஆனால், அவா் அழைப்பை ஏற்கவில்லையாம்.

இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினா் ‘ஃபைன்ட் மை டிவைஸ்’ செயலி மூலம் அருணின் கைப்பேசி இருப்பிடத்தைக் கண்காணித்தபோது, வடவள்ளி அருகே கணுவாய் கல்லுக்குழி பகுதியைக் காண்பித்துள்ளது.

இதையடுத்து, அவா்கள் அந்தப் பகுதிக்கு சனிக்கிழமை சென்று பாா்த்தபோது, வாயில் நுரை தள்ளிய நிலையில் அருண் சடலம் கிடந்தது. அருகே விஷ பாட்டிலும் கிடந்தது.

பல்வேறு நோ்காணல்களில் பங்கேற்றும் வேலை கிடைக்காத விரக்தியில் அருண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments