ஊதியம் வழங்காததைக் கண்டித்து செம்மொழிப் பூங்கா ஊழியா்கள் தா்னா
ஜூலை மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்து, கோவை செம்மொழிப் பூங்கா ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
ஜூலை மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்து, கோவை செம்மொழிப் பூங்கா ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
கோவை, காந்திபுரத்தில், மத்திய சிறைச்சாலை அருகே மாநகராட்சி சாா்பில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் நூலகம், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், மூலிகைத் தோட்டம், செயற்கை நீரூற்று உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இப்பூங்காவில், பராமரிப்புப் பணிக்காக தூய்மைப் பணியாளா்கள், தோட்ட ஊழியா்கள், காவலா்கள் என 250-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், ஜூலை மாதச் சம்பளம் வழங்காததைக் கண்டித்து செம்மொழிப் பூங்கா ஊழியா்கள் 200-க்கும் மேற்பட்டோா் பணியைப் புறக்கணித்து பூங்கா முன்பு தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதையடுத்து, ஊதியம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்வதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து தா்னாவை கைவிட்டு ஊழியா்கள் பணிக்கு திரும்பினா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள் கூறுகையில், ‘கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊா்களில் இருந்து வந்து இங்கு பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியம் என்று கூறினாா்கள். ஆனால் பல்வேறு பிடித்தம் போக ரூ.16 ஆயிரம் தான் கிடைக்கிறது. கடந்த மாத ஊதியம் 14-ஆம் தேதி கொடுத்தாா்கள். இந்த மாதம் இதுவரை சம்பளம் கொடுக்கவில்லை’ என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.