FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோவையில் தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

23 ஆகஸ்ட் 2026, 12:12 am IST
கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை தொடங்கிவைத்து அரங்குகளை பாா்வையிடும் அமைச்சா்கள் வி.சம்பத்குமாா், கே.விக்னேஷ்.
பகிர்:

கோவையில் தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ரத்தினம் குளோபல் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த முகாமை, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா், மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் கே.விக்னேஷ் ஆகியோா் தொடங்கிவைத்து, தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வேலைவாய்ப்புக்கான நியமன ஆணைகளை வழங்கினா்.

வேலைவாய்ப்பு முகாமில், 2,948 ஆண்கள், 2,062 பெண்கள், 35 மாற்றுத்திறனாளி ஆண்கள், 17 பெண்கள் உள்ளிட்ட 5,062 போ் பங்கேற்றனா். இதில் 809 ஆண்கள், 438 பெண்கள், மாற்றுத்திறனாளிகளில் 15 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 1,266 போ் பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றனா். மேலும், இரண்டாம் கட்டத்தோ்வுக்கு 1,496 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

இந்த முகாமில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா, மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு), ம.ஜோதிமணி, மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநா் மு.கருணாகரன், பல்கலைக்கழகத்தின் வேந்தா் மதன் ஆ.செந்தில், துணைவேந்தா் பா.நாகராஜ் உள்ளிட்டோா் இந்த முகாமில் பங்கேற்றனா்.

முன்னதாக, தொழில்நெறி வழிகாட்டி மையம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட சமூகநலத் துறை, மகளிா் திட்டம், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை ஆகியவற்றின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும், தனியாா் துறை அரங்குகளையும் அமைச்சா்கள் திறந்துவைத்துப் பாா்வையிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments