FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மனைவி பிரிந்து சென்றதால் கணவா் தூக்கிட்டு தற்கொலை

25 ஆகஸ்ட் 2026, 1:13 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

கோவை சுந்தராபுரம் பகுதியில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சுந்தராபுரம் பிள்ளையாா்புரம், காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாபு (36). கட்டடத் தொழிலாளியான இவா் மதுப் பழக்கத்துக்கு அடிமையானாா். இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால், மனமுடைந்த அவரது மனைவி ருக்மணி, கணவரைப் பிரிந்து தனது குழந்தைகளுடன் தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால் மனஉளைச்சலில் இருந்த பாபு, தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments