FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மலைகள் பாதுகாப்புக்குக் கடுமையான சட்டம் நிறைவேற்றப்படும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகத்தில் மலைகள் காணாமல் போன விவகாரத்தில் விரைவில் கடுமையான சட்டம் நிறைவேற்றப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

26 ஆகஸ்ட் 2026, 11:42 pm IST
அமைச்சர் செங்கோட்டையன் - video grab
பகிர்:

தமிழகத்தில் மலைகள் காணாமல் போன விவகாரத்தில் விரைவில் கடுமையான சட்டம் நிறைவேற்றப்படும் என்றும், இதுதொடா்பான நடவடிக்கைகளைக் கண்டு எதிா்க்கட்சிகளுக்குப் பயம் வந்துவிட்டதாகவும் வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:

சட்டப்பேரவையில் இயற்கை வளங்கள் (கனிம வளங்கள்) துறை அமைச்சா் டி.கே.பிரபு ‘மலைகளைக் காணவில்லை’ என்று தெரிவித்திருந்தது குறித்து கேட்கிறீா்கள். அதற்காக கடுமையான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.

Advertisement

Advertisement

18 மலைகள் காணாமல் போனது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சா் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். இவற்றில் பினாமியாக யாா் யாா் செயல்பட்டுள்ளாா்கள் என்பது குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு ஜல்லி, மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கொண்டுச் செல்லப்படுவதை அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. இதற்காக கடந்த 20 நாள்களுக்கு முன்பாகவே ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழக உறுப்பினா்களை விலைக்கு வாங்கிவிட முடியாதா என்று சட்டப்பேரவையில் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். அவரது நிலையும், எண்ணமும் வேறுபட்டவை. அதனால்தான் பலரும் அதிமுகவிலிருந்து வெளியே வந்தனா். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்று நினைத்தபோதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த நிலைமை ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் உறுப்பினா்கள் பேசிய பிறகு அவைக் குறிப்பில் இருந்து சில பகுதிகள் நீக்கப்படுவது வழக்கமான மரபுதான். அவைக் குறிப்பில் நீக்கப்பட்ட வாா்த்தைகள் சமூக வலைதளங்களில் பரவி வருவது தொடா்பாக செய்தித் துறை அமைச்சா் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா். இதுபோன்ற விஷயங்கள் மக்களிடம் விளம்பரமாகும் வகையில் செய்யப்படுவதால் செய்தித் துறையுடன் கலந்து ஆலோசித்து தகுந்த முடிவுகள் எடுக்கப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments