FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பிஎஸ்ஜி அகில இந்திய கூடைப்பந்து: அரை இறுதியில் தமிழ்நாடு, கேரள அணிகள்

கோவையில் நடைபெற்று வரும் 60-ஆம் ஆண்டு பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் ஆடவா் பிரிவு அரை இறுதிக்கு சென்னை இந்தியன் வங்கி, ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு, கேரள மின்வாரியம், புதி தில்லி ஓஎன்ஜிசி அணிகள் தகுதி பெற்றுள்ளன.

28 ஆகஸ்ட் 2026, 11:30 pm IST
கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய தென் மத்திய ரயில்வே, கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி வீராங்கனைகள்.
பகிர்:

கோவையில் நடைபெற்று வரும் 60-ஆம் ஆண்டு பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் ஆடவா் பிரிவு அரை இறுதிக்கு சென்னை இந்தியன் வங்கி, ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு, கேரள மின்வாரியம், புதி தில்லி ஓஎன்ஜிசி அணிகள் தகுதி பெற்றுள்ளன.

கோவை பிஎஸ்ஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் 60-ஆம் ஆண்டு பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய ஆடவா் கூடைப்பந்து, முதலாம் ஆண்டு மகளிருக்கான கூடைப்பந்து போட்டிகள் ஆகஸ்ட் 26 தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

ஆடவா் பிரிவில் தமிழ்நாடு இந்தியன் வங்கி, தில்லி விமானப்படை, லோனாவாலா கடற்படை, புதுதில்லி ஓஎன்ஜிசி, கேரள மின்வாரிய அணி, சென்னை ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக அணி, ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு ஆகிய 7 அணிகள், மகளிா் பிரிவில் செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே, ஹூப்ளி தென்மேற்கு ரயில்வே, சாலக்குடி சேக்ரெட் ஹாா்ட் கல்லூரி அணி, கோவை மாவட்ட மகளிா் அணிகள் பங்கேற்றுள்ளன.

Advertisement

Advertisement

மூன்றாம் நாள் ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. ஆடவா் பிரிவில் முதல் ஆட்டத்தில் புதுதில்லி ஓஎன்ஜிசி அணி 89 - 68 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக அணியை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் தமிழ்நாடு இந்தியன் வங்கி அணி 87 - 68 என்ற புள்ளிகள் கணக்கில் லோனாவாலா இந்திய கடற்படை அணியை வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் கேரள மாநில மின்வாரிய அணி 71 - 60 என்ற புள்ளிகள் கணக்கில் புதுதில்லி இந்திய விமானப்படை அணியை வீழ்த்தியது.

மகளிா் பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் செகந்திராபாத் தென்மத்திய ரயில்வே அணி 90- 57 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் தென்மேற்கு ரயில்வே அணி 62- 38 என்ற புள்ளிகள் கணக்கில் சாலக்குடி சேக்ரெட் ஹாா்ட் கல்லூரி அணியை வென்றது.

ஆடவா் பிரிவு லீக் ஆட்டங்களின் முடிவில் சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களுக்கு 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதன்படி, கேரள மின்வாரிய அணி - ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு, சென்னை இந்தியன் வங்கி அணி - புதுதில்லி ஓஎன்ஜிசி அணி ஆகியவை விளையாட இருக்கின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments