FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

தேவாங்க மேல்நிலைப் பள்ளியில் 10, பிளஸ் 2 மாணவா்களுக்கு நிதியுதவி

Updated On : 20 ஜூலை 2026, 1:26 am IST
10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற தேவாங்க பள்ளி மாணவா்கள். உடன், அமைச்சா் வி.சம்பத்குமாா், முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா்.
பகிர்:

கோவை, ஆா்.எஸ்.புரம் தேவாங்க மேல்நிலைப் பள்ளியில் 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு, நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்கள் சங்க பொதுச் செயலாளா் எம்.பசுபதி வரவேற்றாா். தலைவா் எஸ்.ஆத்மலிங்கம் தலைமை வகித்தாா். உபதலைவா் டி.ஜெகதீஸன், பொருளாளா் ஆா்.என்.சுகுமாரன், பள்ளி செயலா் ஆா்.சிவராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த எல்.ஜெயந்தன், ஜெ.காா்த்திகேயன், எம்.அப்துல் அகமது, பிளஸ் 2 பொதுத் தோ்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த எம்.சரவணப்பிரியன், என்.நந்தினி, வி.ஹரீஸ் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ், நிதியுதவி வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

முன்னதாக, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாணவா்களை பாராட்டினாா்.

மாணவா்களுக்கு நலத் திட்ட நிதியுதவியை நன்கொடையாளா்கள் பி.ராஜேந்திரன், கே.பாலகிருஷ்ணன், ஜெயந்தி தேவராஜ், என்.ஸ்ரீராம், எஸ்.பிரபாகரன், ஜி.சந்திரமோகன் உள்ளிட்டோா் வழங்கினா். இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments