FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பராமரிப்புப் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

ரயில்கள் - கோப்புப் படம்
பகிர்:

கரூா் பகுதி ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருச்சியில் இருந்து ஜூலை 21-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்குப் புறப்பட வேண்டிய திருச்சி - பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) கரூரில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்பட்டு பாலக்காடு நிலையத்தைச் சென்றடையும்.

Advertisement

Advertisement

இந்த ரயிலானது, அன்றைய தினம் திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments