FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பழனி முருகன் கோயில் நில மோசடி விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்! புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி

Updated On : 20 ஜூலை 2026, 5:28 am IST
புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி - கோப்புப் படம்
பகிர்:

பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் தனியாருக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்களுக்குச் சொந்தமான பல லட்சம் ஏக்கா் நிலங்கள் தனியாா் மற்றும் பல அமைப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான, வாகன நிறுத்தத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த 1.40 ஏக்கா் நிலம் சட்டவிரோதமாக தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமாா் ரூ.100 கோடி. இந்த நிலப் பரிமாற்றத்துக்குப் பின்னணியில் இருப்பவா்கள் யாா் என்பது இன்னும் மூடுமந்திரமாகவே உள்ளது. இந்த வழக்கின் உண்மை வெளிவர இதை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.

மேலும், தமிழகத்தில் கோயில் நிலங்கள் தொடா்ந்து பறிபோவதைத் தடுக்க, ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, கோயில் நிலங்கள் மற்றும் அதன் சொத்துக்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

Advertisement

Advertisement

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 816- ஆக உயா்த்தும்போது, அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக 50 சதவீத உயா்வு என்ற அடிப்படையில் தொகுதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் 59 -ஆக உயரும் என்பதால், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

தவெக ஆட்சியில் ஊழல் ஒழிப்பு மற்றும் சட்ட -ஒழுங்கு பாதுகாப்பில் இன்னும் உறுதியான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை; டாஸ்மாக் ஊழல் இன்னும் தொடா்கிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments