தவெக ஆட்சியில் 30% லஞ்சம் குறைந்தது என்றால் பழனியில் நடந்தது என்ன? - கிருஷ்ணசாமி கேள்வி
தவெக ஆட்சியில் 30 சதவீதம் லஞ்சம் குறைந்தது என்றால் பழனி கோயிலில் நடைபெற்றது என்ன? என கிருஷ்ணசாமி கேள்வி குறித்து...
கோவை: தவெக ஆட்சியில் 30 சதவீதம் லஞ்சம் குறைந்தது என்றால் பழனி கோயிலில் நடைபெற்றது என்ன என கேள்வி எழுப்பியுள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழகத்தில் கோயில் நிலங்கள் தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தொகுதி மறுவரை திருத்த சட்ட மசோதா இன்று மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், வட மாநிலங்களில் கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்பதால் அதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அவர் தெரிவித்தார். அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீதம் உயர்வு என்ற அடிப்படையில் மீண்டும் தாக்கல் செய்ய உள்ளதால் தமிழகத்திற்கு பெரிய இழப்பு ஏதுமில்லை. எனவே இந்த மசோதாவை ஏக மனதாக வரவேற்க வேண்டும்.
Advertisement
Advertisement
சிபிஐ விசாரணை வேண்டும்
மேலும், தமிழகத்தில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் பழனி கோயில் நிலம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு பின்னால் யார் உள்ளார் என்பதை முறையாக விசாரிக்க வேண்டும். மூடு மந்திரமாக உள்ள பழனி கோயில் நில விவகாரம் சிபிசிஐடி விசாரணையில் இருந்தாலும் அதனை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பொதுவெளிக்கு வந்து விடக்கூடாது
தமிழகத்தில் கோயில் நிலங்கள் எவ்வளவு உள்ளது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நில அபகரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பள்ளி குழந்தைகளின் தரவுகளை பதிவு செய்வது என்பது ஆபத்தானது என்பதால் அரசு அதனை கைவிட வேண்டும். சாதி மதம் குறித்து குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது. குழந்தைகளிடம் சேகரிக்கும் தரவுகள் நாளை பொதுவெளிக்கு வந்து விடக்கூடாது என்று அவர் அறிவுறுத்தினர்.
சொல்லும்படி ஒன்றும் இல்லை
கடந்த அறுபது நாள்கள் தவெக ஆட்சியில் சொல்லும்படி ஒன்றும் இல்லை. தமிழகத்தில் 30 சதவிகிதம் லஞ்சம் குறைந்தது என்றால் பழனி கோயிலில் நடைபெற்றது என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
தவெக ஆட்சி பயிற்சியில் தான் உள்ளது
டாஸ்மாக் துறையில் எந்த மாற்றமும் வரவில்லை. பத்து ரூபாய் என்பது இருபது ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், தவெக ஆட்சி இன்னும் பயிற்சியில் தான் உள்ளது. ஆக்கபூர்வமாக எதுவும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார். இதேபோல் தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் வெறும் புள்ளி விவரங்கள் மட்டுமே உள்ளது என அவர் விமர்சித்தார்.
If corruption dropped by 30% under the TVK government, what happened in Palani?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.