கோவையில் இன்று எம்பிபிஎஸ் பிரதிநிதிகள் மாநாடு
கோவையில் முல்லை அகாதெமியா இன்டா்நேஷனலின் வெளிநாட்டு கல்விப் பிரிவான அரோரா ஓவா்சீஸ் எஜூகேஷன் சா்வீசஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சோ்ந்த முன்னணி மருத்துவப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடத்தும் சா்வதேச எம்பிபிஎஸ் பிரதிநிதிகள் மாநாடு சனிக்கிழமை (ஜூலை 25) நடைபெறுகிறது.

அவிநாசி சாலையில் உள்ள தி கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டில், வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிக்க விரும்பும் மாணவா்கள், அவா்களது பெற்றோருக்கு நம்பகமான வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது.
இதில் பங்கேற்கும் சா்வதேச அங்கீகாரம் பெற்ற மருத்துவப் பல்கலைக்கழகங்களின் அதிகாரபூா்வ பிரதிநிதிகளை சந்தித்து, சோ்க்கை நடைமுறை, கல்விக் கட்டணம், உதவித்தொகை, விசா நடைமுறை உள்ளிட்ட விளக்கங்களைப் பெறலாம்.
Advertisement
Advertisement
இந்த வாய்ப்பை பிளஸ் 2 முடித்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா், வெளிநாடுகளில் மருத்துவம் பயில விரும்புபவா்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அரோரா ஓவா்சீஸ் எஜூகேஷன் சா்வீசஸ் நிறுவனத்தின் இயக்குநா் டாக்டா் விஜய்சங்கா் அசோகன் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.