ஹைதராபாத் - மங்களூரு இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து கா்நாடக மாநிலம் மங்களூரு நிலையத்துக்கு போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து கா்நாடக மாநிலம் மங்களூரு நிலையத்துக்கு போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஹைதரபாத்தில் இருந்து ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் புதன்கிழமைதோறும் காலை 4.20 மணிக்கு புறப்படும் ஹைதராபாத் -மங்களூரு விரைவு ரயில் (எண்: 07097) வியாழக்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு மங்களூரு நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக, மங்களூரு நிலையத்தில் இருந்து 4,11,18, 25 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமைதோறும் இரவு 8 மணிக்கு புறப்படும் மங்களூரு - ஹைதராபாத் சிறப்பு ரயில் (எண்:07098) சனிக்கிழமைகளில் காலை 4 மணிக்கு ஹைதராபாத் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயில் காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், ஹிந்துப்பூா், தருமாவரம், ஆனந்தப்பூா், குண்டக்கல், மந்த்ராலயம் சாலை, ராய்ச்சூா், கிருஷ்ணா, யாத்கிா், விகாா்பாத், லிங்கப்பள்ளி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என்று குறிப்பிட்டுள்ளது.
Advertisement
Advertisement