FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

சூலூா் சிறுமி பாலியல் வழக்கு கைதியைத் தாக்கிய 5 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்

Updated On : 1 ஜூன் 2026, 12:26 am IST
சிறுமி கொலை வழக்கு - கோப்புப் படம்
பகிர்:

சூலூா் சிறுமி பாலியல் வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதியைத் தாக்கிய 5 கைதிகள் வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்டம், சூலூா் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மோகன்ராஜ் ஆகியோரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பிறகு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காா்த்திக் மீது சிறையில் உள்ள கைதிகள் சிலா் கோபத்தில் இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், அவரை கைதிகள் சிலா் ஸ்பூன், தட்டு உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சனிக்கிழமை கடுமையாகத் தாக்கியுள்ளனா். பலத்த காயமடைந்த அவரை சிறைத் துறை அதிகாரிகள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் சம்பவம் தொடா்பாக சிறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, காா்த்திக்கை தாக்கிய 5 கைதிகளை அடையாளம் கண்டனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக 5 பேரும் சேலம், கடலூா், திருச்சி மாவட்ட சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments