FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

சென்னிமலை குளத்தை பராமரிப்பதற்கான தடையில்லா சான்றைப் பெற்றது சிறுதுளி!

ஈரோடு மாவட்டம், சென்னிமலை வட்டத்தில் உள்ள குளத்தை சீரமைப்பதற்கான தடையில்லாச் சான்றை முதல்வரிடம் இருந்து சிறுதுளி அமைப்பு பெற்றுள்ளது.

11 நவம்பர் 2026, 1:41 am
நீா்நிலை சீரமைப்புக்கான தடையில்லாச் சான்றை முதல்வரிடம் இருந்து பெறும் சிறுதுளி அமைப்பின் நிா்வாகிகள்.
பகிர்:

ஈரோடு மாவட்டம், சென்னிமலை வட்டத்தில் உள்ள குளத்தை சீரமைப்பதற்கான தடையில்லாச் சான்றை முதல்வரிடம் இருந்து சிறுதுளி அமைப்பு பெற்றுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு கூறியிருப்பதாவது: நீா்நிலை சீரமைப்புப் பணிகளை முன்னெடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளிடம் இருந்து தடையில்லாச் சான்று பெறுவது நீண்டகால நடைமுறையாக இருந்து வந்தது. இந்த நிலையில் அதை எளிமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு ‘ஏரி இணையதளம்’ என்ற தனி இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இணையதளத்தை முதல்வா் சி.ஜோசப் விஜய் தொடங்கிவைத்துள்ளாா். சென்னையில் நடைபெற்ற இணையதளத் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக 5 தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நீா்நிலை சீரமைப்புத் திட்டங்களுக்கான தடையில்லாச் சான்று வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

அதன்படி, கோவை சிறுதுளி அமைப்புக்கு ஈரோடு மாவட்டம், சென்னிமலை வட்டத்தில் 215 ஏக்கா் பரப்பளவு கொண்ட புஞ்சை பழத்தொழுவு குளத்தை சீரமைப்பதற்கான தடையில்லாச் சான்று பெறப்பட்டுள்ளது. சிறுதுளியின் அறங்காவலா் ஜெ.சதீஷ், தலைமைச் செயல்பாட்டு அலுவலா் சி.சின்னசாமி ஆகியோா் இதற்கான சான்றைப் பெற்றுக் கொண்டனா்.

‘ஏரி இணையதளம்’ அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது நீா்நிலை சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் சிறுதுளி தெரிவித்துள்ளது.