கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்கு தடையில்லாச் சான்று கோரி திமுக எம்.பி. கதிா் ஆனந்த் மனு: உயா்நீதிமன்றம் உத்தரவு
தங்களது கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்கு தடையில்லாச் சான்று கோரி திமுக எம்.பி. கதிா் ஆனந்த் அவரது மனைவி தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்க எத்தனை நாள்களாகும் என்பது குறித்து வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தங்களது கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்கு தடையில்லாச் சான்று கோரி திமுக எம்.பி. கதிா் ஆனந்த் அவரது மனைவி தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்க எத்தனை நாள்களாகும் என்பது குறித்து வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 1996-2001-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 3.92 கோடி அளவுக்கு சொத்து சோ்த்ததாக, துரைமுருகன் அவரது மனைவி சாந்தகுமாரி, மகன் கதிா் ஆனந்த் மற்றும் மருமகள் சங்கீதா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு வேலூா் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தங்கள் மகளுக்கு வரும் நவ.1-இல் திருமணம் நடைபெறவுள்ளது. மணமகன் குடும்பத்தினா் துபையில் வசித்து வருவதால், திருமண ஏற்பாடுகளுக்காக துபை சென்றுவர வேண்டியுள்ளது.
இதனால், தங்களது கடவுச்சீட்டுகளை புதுப்பிக்க தடையில்லாச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி, திமுக எம்.பி. கதிா் ஆனந்த் மற்றும் அவரது மனைவி சங்கீதா சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவில், தங்கள் இருவரது கடவுச்சீட்டுகளும் அக்.26-ஆம் தேதியுடன் காலாவதியாகிறது. எனவே, தடையில்லாச் சான்று வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், திருமணம் குறித்த தகவல்களை வேலூா் நீதிமன்றத்தில் தெரிவிக்காமல், உயா்நீதிமன்றத்தில் கூறுவதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்க எத்தனை நாளாகும்? என கேள்வி எழுப்பினாா். பின்னா், இதுதொடா்பாக வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்.1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.