ஹெச். ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை ரத்து!
ஹெச். ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை ரத்து செய்யப்பட்டது பற்றி...
பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு இரு வழக்குகளில் விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.
பெரியார் சிலை உடைப்பது, அறநிலைத்துறை அதிகாரிகளின் குடும்பத்தினரை அவதூறாக பேசியது, திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறாக பேசியது உள்பட 11 வழக்குகள் ஹெச்.ராஜா மீது பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், ஹெச். ராஜா தரப்பில் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்து சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹெச். ராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், ஹெச். ராஜாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன் இன்று தீர்ப்பளித்தார்.
Jail sentence imposed on H. Raja set aside!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.