முகப்பு
கோயம்புத்தூர்

வாகன உதிரிபாக கிடங்கில் தீ

கோவை, சின்னியம்பாளையம் அருகே வாகன உதிரிபாக கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு வீரா்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

58 வினாடிகள் முன்பு
வாகன உதிரிபாக கிடங்கில் தீ
தீ - பிரதிப் படம்
பகிர்:

கோவை, சின்னியம்பாளையம் அருகே வாகன உதிரிபாக கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு வீரா்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

கோவை சிட்ரா பகுதியைச் சோ்ந்தவா் ரவி (39). இவா் சின்னியம்பாளையம்- இருகூா் சாலையில் பழைய காா் மற்றும் இருசக்கர வாகன உதிரிபாக விற்பனைக் கடை நடத்தி வருகிறாா். கிடங்கு அருகிலேயே உள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் கிடங்கில் இருந்து கரும்புகை வெளியேறி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவலறிந்து விரைந்து வந்த பீளமேடு தீயணைப்பு நிலைய வீரா்கள் பல மணி நேரம் போராடி அதிகாலை 4 மணியளவில் தீயை முற்றிலும் அணைத்தனா். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.