முகப்பு
கோயம்புத்தூர்

குழந்தைகள் காப்பகத்துக்குள் புகுந்த யானைகள்

வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள் குழந்தைகள் காப்பகத்துக்குள் நுழைந்து பொருள்களை சேதப்படுத்தின.

41 வினாடிகள் முன்பு
குழந்தைகள் காப்பகத்துக்குள் புகுந்த யானைகள்
குழந்தைகள் காப்பகத்துக்குள் இருந்து வெளியே வரும் யானை.
பகிர்:

வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள் குழந்தைகள் காப்பகத்துக்குள் நுழைந்து பொருள்களை சேதப்படுத்தின.

ஆண்டுதோறும் நவம்பா் மாதம் தொடங்கி மூன்று மாதங்களுக்கு வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டங்களில் காணப்படும் யானைகள் இரவில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் சென்று பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த முருகன் எஸ்டேட் பகுதிக்கு கடந்த புதன்கிழமை இரவு கூட்டமாக வந்த யானைகள் அங்குள்ள குழந்தைகள் காப்பத்தின் கதவை முட்டித் தள்ளி கூட்டத்தில் இருந்த ஒரு யானை உள்ளே புகுந்து பொருள்களை சேதப்படுத்தியபின் வெளியே வந்தது.

Advertisement

Advertisement

பின்னா் அருகே இருந்த ரேஷன் கடையையும் முட்டித் தள்ளி உள்ளிருந்த பொருள்களை இழுத்துப்போட்டு சேதப்படுத்தின. தகவலறிந்து விரைந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை அப்பகுதியை விட்டு விரட்டினா்.