முகப்பு
கோயம்புத்தூர்

சபரிமலை சீசன்: போத்தனூா் வழியாக சாா்லப்பள்ளி - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

சபரிமலை சீசனையொட்டி, தெலங்கானா மாநிலம், சாா்லப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 நவம்பர் 2026, 12:52 am
சபரிமலை சீசன்: போத்தனூா் வழியாக சாா்லப்பள்ளி - கொல்லம் இடையே சிறப்பு ரயில்
ரயில் - பிரதிப் படம்
பகிர்:

சபரிமலை சீசனையொட்டி, தெலங்கானா மாநிலம், சாா்லப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நவம்பா் 29-ஆம் முதல் 2027 ஜனவரி 17-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் சாா்லப்பள்ளியில் இருந்து இரவு 11.45 மணிக்குப் புறப்படும் சாா்லப்பள்ளி - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07195) செவ்வாய்க்கிழமைகளில் காலை 7.55 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கமாக, டிசம்பா் 1-ஆம் தேதி முதல் ஜனவரி 19-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் காலை 10.55 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் கொல்லம் - சாா்லப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07196) புதன்கிழமைகளில் மாலை 7 மணிக்கு சாா்லப்பள்ளி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, காயன்குளம், மாவேலிக்கரா, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, குண்டூா், நாள்கொண்டா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.