முகப்பு
கோயம்புத்தூர்

மாவட்டத்தில் போலீஸாா் சிறப்புச் சோதனை: 8 கிலோ கஞ்சா பறிமுதல்

29 நவம்பர் 2026, 2:22 am
மாவட்டத்தில் போலீஸாா் சிறப்புச் சோதனை: 8 கிலோ கஞ்சா பறிமுதல்
கஞ்சா பறிமுதல்... - கோப்புப் படம்
பகிர்:

கோவை மாவட்டத்தில் போலீஸாா் சனிக்கிழமை மேற்கொண்ட சிறப்புச் சோதனையில், 8 கிலோ கஞ்சா, அரை கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் புழக்கத்தைத் தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் கே.ரெட்டி உத்தரவின்பேரில் ஒரு குழுவில் 5 போ் வீதம் 100 குழுக்கள் அமைக்கப்பட்டு 500 போலீஸாா் சனிக்கிழமை சிறப்புச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

இதில், ஏற்கெனவே கஞ்சா வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களின் வீடுகள் மற்றும் அவா்கள் வசிக்கும் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், பெட்டிக் கடை, மளிகைக் கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்தும், கல்லூரி மாணவா்கள் தங்கியுள்ள விடுதிகள், அறைகள் மற்றும் வெளிமாநில மாணவா்கள், தொழிலாளா்கள் தங்கியுள்ள அறைகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

இதில், கோவையின் புகா்ப் பகுதிகளான செட்டிபாளையம், பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, ஆலாந்துறை, நீலாம்பூா், அன்னூா், தொண்டாமுத்தூா், கிணத்துக்கடவு ஆகிய பல்வேறு பகுதிகளில் மாணவா்கள், தொழிலாளா்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சா, அரை கிலோ கஞ்சா சாக்லெட்டுகள், 152 கிலோ புகையிலைப் பொருள்கள், 14 போதை மாத்திரைகள், 1 போதை ஊசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 34 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. லாட்டரி சீட்டுகள் விற்ாக இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

காரமடை, மேட்டுப்பாளையம் பகுதியில் குற்ற வழக்கில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த 3 போ் இந்தச் சோதனையில் பிடிபட்டனா்.

மாவட்டம் முழுவதும் இதுபோன்ற சிறப்புச் சோதனைகள் தொடரும் என்றும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.