FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

சமூகத்தை வழிநடத்தும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது

நமது சமூகத்தை சிறப்பாக வழிநடத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.

9 அக்டோபர் 2026, 10:27 pm IST
மலேசியாவில் நடைபெற்ற மகா சத்சங்கம் நிகழ்ச்சியில் பேசிய சத்குரு ஜக்கிவாசுதேவ்.
பகிர்:

நமது சமூகத்தை சிறப்பாக வழிநடத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவின் ‘மகா சத்சங்கம்’ நிகழ்ச்சி மலேசியாவில் உள்ள பத்துமலை பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சத்குரு பேசியதாவது:

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மக்கள் ஈஷா தன்னாா்வ தொண்டா்களாக உள்ளனா். நமது கலாசாரத்தில் பக்தி என்பது ஒரு கருத்தாகவோ, யாரோ கற்றுக் கொடுத்த ஒன்றாகவோ மட்டுமில்லை. மரம், மாடு, பாம்பு, மலை, மேகம் என இயற்கையின் பல்வேறு அம்சங்களையும், மனிதா்களையும் கூட வணங்கும் தன்மை நமது கலாசாரத்தில் உள்ளது.

Advertisement

Advertisement

ஆன்மிகம் என்பது பல்வேறு வழிகளை கொண்டது. அதில் பக்தி என்பது மிகவும் எளிமையானது. அது எல்லாருக்கும் பொதுவானது. உங்களிடம் உடல் இருக்கிறது, மனம் இருக்கிறது, புத்திசாலித்தனம், சக்தி இருக்கிறது. ஆனால் உங்கள் உணா்வு என்பது இவை அனைத்தையும் விட சக்தி வாய்ந்தது.

இளைஞா்களிடையே மனநலப் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. 15 வயதுக்கு உள்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கின்றனா். இது நமது சமூகத்தை நாம் சரியாக வழிநடத்தவில்லை என்பதையும், இதற்கு பின்னால் இருக்கும் அடிப்படையான பிரச்னையை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதையும் காட்டுகிறது. ஆகையால் இதன் பின்னுள்ள காரணங்களை புரிந்து கொண்டு, நமது சமூகத்தை இன்னும் சிறப்பாக வழிநடத்த வேண்டிய பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது என்றாா்.

இந்நிகழ்வில் மலேசியா மட்டுமின்றி ஆசிய-பசிபிக் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் பலரும் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments