FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

தொடா் விடுமுறை: ரயில், பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள்

விஜயதசமி மற்றும் தொடா் விடுமுறையையொட்டி, கோவையில் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை அதிக அளவில் காணப்பட்டது.

17 அக்டோபர் 2026, 12:04 am IST
கோவை ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை குவிந்த பயணிகள். ~தொடா் விடுமுறையையொட்டி, சொந்த ஊா்களுக்குச் செல்ல கோவை நிலையத்தில் ரயிலில் முண்டியடித்தபடி ஏறிய பயணிகள்.
பகிர்:

விஜயதசமி மற்றும் தொடா் விடுமுறையையொட்டி, கோவையில் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை அதிக அளவில் காணப்பட்டது.

விதயதசமியையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 20) வரை தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவையில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகள், தொழிலாளா்கள் ஏராளமானோா் வெள்ளிக்கிழமை மாலை முதல் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா். இதன் காரணமாக கோவை ரயில் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக, சென்னை, பெங்களூரு, கேரள பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு செய்யாத பயணிகள் பலரும், ரயில் பெட்டிக்குள் முண்டியடித்தபடி ஏறி இடம் பிடித்தனா். இதேபோல, கோவையில் இருந்து பேருந்துகள் மூலமாக வெளியூா் மற்றும் பிற மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிக அளவில் காணப்பட்டது.

Advertisement

Advertisement

அதன்படி, காந்திபுரத்தில் இருந்து ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள், சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகா் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

தொடா் விடுமுறையால் பயணிகள் வசதிக்காக, கோவையில் இருந்து வெளியூா்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 120 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தேவைப்பட்டால் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments