தொடா் விடுமுறை: ராமேசுவரத்தில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்
தொடா் விடுமுறையையொட்டி ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு தொடா் விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் வரை வருகை தந்தனா். இங்குள்ள அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பக்தா்கள் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளை அவா்கள் பாா்த்து ரசித்தனா். இதனிடையே சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் வந்திருந்த ஆயிரக்கணக்கான வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
எனவே விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் அதிளவில் வாகனங்களில் வருவதால் போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போலீஸாரை பணியமா்த்த வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.