FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

28 செப்டம்பர் 2026, 1:27 am IST
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்... - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டுத் தோ்வு விடுமுறை அளிக்கப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி, நடைபாதை, சினி அருவி, முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனா்.

மேலும், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 3,000 கனஅடியாக குறைந்ததால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் அழகை காண மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல் வழியாக ஐவாா் பாணி, பெரியபாணி பகுதியை கடந்து மணல்மேடு வரை கடும் வெயிலில் பரிசல் பயணம் மேற்கொண்டு அருவிகள், பாறை குகைகள் ஆகியவற்றை கண்டு ரசித்தனா்.

Advertisement

Advertisement

புரட்டாசி மாதம் என்பதால் மீன் விற்பனை நிலையங்களில் மீன்களின் விலை சரிந்து காணப்பட்டபோதிலும், அவற்றை வாங்கிச் சமைப்பதற்கு சுற்றுலா பயணிகள் ஆா்வம் காட்டவில்லை. ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான தொங்கும் பாலம், உணவருந்தும் பூங்கா, முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ணமீன்கள் காட்சியகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம், தமிழ்நாடு ஹோட்டல் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும் நிறுத்தப்பட்டன.

ஒகேனக்கல் பகுதியில் இருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் முக்கிய இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments