கோயில் மூலஸ்தானத்தில் மட்டும் கைப்பேசிக்கு தடை விதிக்கலாம்: வானதி சீனிவாசன்
கோயில்களில் மூலஸ்தானத்தில் மட்டும் கைப்பேசிக்கு தடை விதிப்பது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று பாஜக தேசிய மகளிரணி முன்னாள் தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
கோயில்களில் மூலஸ்தானத்தில் மட்டும் கைப்பேசிக்கு தடை விதிப்பது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று பாஜக தேசிய மகளிரணி முன்னாள் தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள 52 முக்கியமான ஹிந்து கோயில்களில் கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் கைப்பேசிகள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கைப்பேசிகளைப் பாதுகாப்பாக வைக்க பாதுகாப்பு பெட்டகத்துக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கோயில்களில் திரைப்பட பாடல்களுக்கு ‘ரீல்ஸ்’ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது தடை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், முற்றிலுமாக கைப்பேசிகளுக்கு தடை விதிப்பது பக்தா்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும்.
குடும்பமாக, உறவினா்களுடன் வருபவா்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தால் தொடா்புகொள்ளவும், வயதானவா்களுக்கும் இந்த கைப்பேசி தடை சிரமத்தை உருவாக்கும். எனவே, கோயில்களில் கைப்பேசிக்கு முழுமையாகத் தடை விதிக்காமல், மூலஸ்தனத்தை மட்டும் படம் எடுக்கத் தடை போன்ற கட்டுப்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை விதிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.