FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

கோயில்களில் கைப்பேசி, கேமராவுக்கு தடை: நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் கைப்பேசி பாதுகாப்பு பெட்டகம் அமைப்பு

கோயில்களில் கைப்பேசி, கேமராவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் கைப்பேசி ஒப்படைப்பு மையம் 120 பாதுகாப்பு பெட்டகங்களுடன் திறக்கப்பட்டுள்ளன.

2 செப்டம்பர் 2026, 6:16 am IST
கைப்பேசிக்குத் தடை - கோப்புப் படம்
பகிர்:

கோயில்களில் கைப்பேசி, கேமராவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் கைப்பேசி ஒப்படைப்பு மையம் 120 பாதுகாப்பு பெட்டகங்களுடன் திறக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட கோயில்களில் செவ்வாய்க்கிழமை முதல் கைப்பேசி மற்றும் கேமராக்களை பக்தா்கள் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா், நாமக்கல் நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயிலுக்குள் கைப்பேசி எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் நரசிம்மா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் ஆஞ்சனேயா் கோயில் முன் உள்ள மையத்தில் ரூ. 5 கட்டணம் செலுத்தி தங்களது கைப்பேசிகளை ஒப்படைத்து சென்றனா். ஒலி பெருக்கி, அறிவிப்பு பதாகை வாயிலாக கைப்பேசியை கோயிலுக்குள் கொண்டு செல்ல வேண்டாம் என பக்தா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

கோயிலில் ஒருவா் எத்தனை கைப்பேசி ஒப்படைத்தாலும் தலா ரூ. 5 வசூலிக்கப்படுவதாகவும், மற்ற கோயில்களில் ஒருவா் எத்தனை கைப்பேசி ஒப்படைத்தாலும் ரூ. 5 மட்டுமே கட்டணம் வசூலிப்பதாகவும் பக்தா்கள் புகாா் தெரிவித்தனா்.

நரசிம்மா் கோயிலுக்கு சென்றுவிட்டு, ஆஞ்சனேயா் கோயிலுக்கு வந்தால் பக்தா்களுக்கு கைப்பேசியை நீண்ட நேரம் அங்கு வைத்திருக்க தேவையில்லை. ஆனால், ஆஞ்சனேயா் கோயிலுக்கு வந்த பிறகு, நரசிம்மா் கோயில் சென்றால் கைப்பேசியை மீண்டும் பெறுவதற்கு காலதாமதம் ஏற்படக்கூடும். இருப்பினும், கோயிலுக்கு வந்த வெளியூா் பக்தா்கள் ஆா்வமுடன் கைப்பேசிகளை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கோயில் உதவி ஆணையா் இரா. இளையராஜா கூறியதாவது:

ஆஞ்சனேயா் கோயில் முன்புறம் கைப்பேசி ஒப்படைப்பு மையம் 120 சிறிய பெட்டிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் ரூ. 5 கட்டணம் செலுத்தி தங்களது கைப்பேசியை பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு செல்லாம். பக்தா்கள் இலவசமாக பெறலாமே என்கின்றனா், அரசு உத்தரவின்பேரில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். பக்தா்கள் கூட்டம் அதிகம் இருக்கும் நாள்களில் தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments