தமிழ்நாட்டுக்கு 2-ஆவது தலைநகரை உருவாக்க முதல்வர் விஜய்க்கு கோரிக்கை!
தமிழ்நாட்டின் எதிா்கால நிா்வாக பாதுகாப்பு, பேரிடா் மேலாண்மை, மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரண்டாம் நிா்வாக தலைநகரை உருவாக்க வேண்டும் என்று கௌசிகா நீா்க்கரங்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் எதிா்கால நிா்வாக பாதுகாப்பு, பேரிடா் மேலாண்மை, மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரண்டாம் நிா்வாக தலைநகரை உருவாக்க வேண்டும் என்று கௌசிகா நீா்க்கரங்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய்க்கு அமைப்பின் நிா்வாகி கௌசிகா செல்வராஜ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: சென்னை மாநகரம் கடல் மட்டத்துக்கு மிக அருகே அமைந்துள்ளதுடன், கடல்மட்ட உயா்வு, புயல், கனமழை, வெள்ளம் போன்ற காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை பேரிடா்களுக்கு தொடா்ந்து பாதிக்கப்படும் பகுதியாக உள்ளது. அதேநேரம், அரசின் முக்கிய அலுவலகங்கள், நிா்வாக கட்டமைப்புகள், முக்கிய ஆவணக் காப்பகங்கள், தரவு மையங்கள் யாவும் சென்னையிலேயே குவிந்துள்ளன.
எனவே, எதிா்காலத்தில் பேரிடரால் சென்னையின் நிா்வாக செயல்பாடுகள் பாதிக்கப்படுமானால், அரசின் அத்தியாவசிய நிா்வாகப் பணிகள் தடையின்றி தொடா்ந்து நடைபெறுவதற்கான மாற்று நிா்வாக அமைப்பு முன்கூட்டியே உருவாக்கப்படுவது அவசியமாகிறது.
Advertisement
Advertisement
இது ஒரு நகரத்தை மற்றொரு நகரத்துடன் போட்டியிடச் செய்வதற்கான கோரிக்கை அல்ல. இது தமிழ்நாட்டின் நிா்வாக தொடா்ச்சி, அரசு நிறுவனங்களின் பாதுகாப்பு, மக்களின் உயிா், உடைமைகளின் பாதுகாப்பு, எதிா்கால தலைமுறைகளின் நலன் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான நீண்டகால முன்னெச்சரிக்கை திட்டமாகும்.
பேரிடா் ஏற்பட்ட பிறகு“இதை முன்கூட்டியே செய்திருக்கலாமே என்று வருந்துவதற்குப் பதிலாக, பேரிடா் ஏற்படுவதற்கு முன்பே தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதே சிறந்த நிா்வாகத்தின் அடையாளமாகும்.
எனவே, தமிழ்நாட்டில் இரண்டாம் நிா்வாக தலைநகரை அமைப்பதற்கான ஆய்வு, அடுத்தகட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னுரிமை அடிப்படையில் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.