FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் சுதந்திர தின விழா

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெற்ற ஈரோடு புத்தகத் திருவிழாவில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெற்ற ஈரோடு புத்தகத் திருவிழாவில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
 இந்நிகழ்ச்சிக்கு, மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினரும், ஏ.இ.டி. பள்ளித் தாளாளருமான பி.காசியண்ணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் சுதந்திர தின சிறப்புரையாற்றினார். 
அதில், சுதந்திரத்தின் மேன்மை குறித்தும், விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகம் குறித்தும், அவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களைப் படிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.
அதன் பின்னர், வ.உ.சி. பூங்கா மைதானத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் உருவச் சிலைக்குப் பேரவையின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், பேரவையின் பொதுக்குழு, பணிக்குழு உறுப்பினர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், தன்னார்வ மாணவத் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments