FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

மூப்பனார் பிறந்த நாள் விழா

மொடக்குறிச்சி வட்டாரம் சார்பில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மூப்பனார் பிறந்த நாள் விழா அவல்பூந்துறை நால்ரோட்டில் கொண்டாடப்பட்டது. 

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 8:56 am IST
பகிர்:

மொடக்குறிச்சி வட்டாரம் சார்பில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மூப்பனார் பிறந்த நாள் விழா அவல்பூந்துறை நால்ரோட்டில் கொண்டாடப்பட்டது. 
 விழாவில், மொடக்குறிச்சி வட்டார தமாகா கட்சித் தலைவர் பேட்டை சுரேஷ் கட்சிக் கொடியேற்றி வைத்து, மூப்பனாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை  செலுத்தினார்.
 தொடர்ந்து அவர் பேசுகையில், மூப்பனார் பிறந்த நாள் விழா விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் நடைபெறும் விவசாய தின பொதுக் கூட்டத்துக்கு மொடக்குறிச்சி வட்டார கமிட்டி சார்பில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.
 இதில், மாவட்ட இளைஞரணி செயலாளர் வெற்றிவேல், வட்டார இளைஞரணி தலைவர் யுவராஜ், பேரூர் தலைவர் மயில்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments