FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

உர விற்பனைக் கருவி பராமரித்தல் செயல் விளக்கம்

கோபியில் வேளாண் இடு பொருள் விற்பனையாளர்களுக்கு உர விற்பனைக்கருவி பராமரித்தல் குறித்து செயல்விளக்கப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜூன் 2018, 12:52 am IST
பகிர்:

கோபியில் வேளாண் இடு பொருள் விற்பனையாளர்களுக்கு உர விற்பனைக்கருவி பராமரித்தல் குறித்து செயல்விளக்கப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
கோபி வட்டார உரம், பூச்சி மருந்து விற்பனையாளர்களுக்கு பாயின்ட் ஆஃப் சேல் எனப்படும் உர விற்பனைக் கருவி பராமரித்தல் குறித்தான பயிற்சி முகாம் நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தலைமை வகித்து, உரம், பூச்சி மருந்துகளை இருப்பு வைத்து விற்பனை செய்யும்போது உரிய விதிகளைப் பின்பற்றுவது குறித்தும், விதிகளை மீறி தடை செய்யப்பட்டுள்ள பூச்சி மருந்துகளை விற்பனை செய்தால் துறை நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்தும் விளக்கி பேசினார்.
பாயின்ட ஆஃப் சேல் கருவியில் உரங்கள் இருப்பு பதிவு செய்வது குறித்தும், கருவியின் பராமரிப்பு குறித்தும்  கோபி வேளாண்மை அலுவலர் சந்திரசேகர் செயல் விளக்கம் செய்து காண்பித்தார். கூகலூர் வேளாண்மை அலுவலர் பவானி நன்றி கூறினார்.       
இந்தப் பயிற்சி முகாமில் கோபி வட்டாரத்துக்கு உள்பட்ட தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த பூச்சி மருந்து, உரவிற்பனையாளர்கள், உரவிற்பனை இயந்திரங்களுடன் கலந்து கொண்டு விளக்கம் பெற்றனர். 
கோபி வட்டாரத்தில் இதுவரை கூட்டுறவு சங்கங்களுக்கு 18 உர விற்பனை இயந்திரங்களும், தனியார் கடைகளுக்கு 40 இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முகாமுக்கான ஏற்பாடுகளை வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் அரவிந்தன்,  உதவி மேலாளர் தங்கராசு செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments