FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மின்சாரம் பாய்ந்து பணியாளர் சாவு

பண்ணாரி கோயில் நீர் உந்துத் தொட்டியில் மோட்டார் பழுது பார்த்தபோது மின்சாரம் பாய்ந்ததில் தனியார் மின் பணியாளர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

பண்ணாரி கோயில் நீர் உந்துத் தொட்டியில் மோட்டார் பழுது பார்த்தபோது மின்சாரம் பாய்ந்ததில் தனியார் மின் பணியாளர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
 சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன்நகர் அருகில் பண்ணாரி கோயிலின் நிர்வாகத்துக்குச் சொந்தமான நீர் உந்துத் தொட்டியில் மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பண்ணாரி கோயிலின் நிர்வாகத்தினர் ராஜன்நகரில் மோட்டார் பழுது பார்க்கும் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வரும் ராஜேந்திரன் (48) என்பரிடம் ஒப்படைத்து, மோட்டாரை சரி செய்யக் கூறியுள்ளனர். அங்கு சென்ற ராஜேந்திரன் கோயிலின் நீர் உந்து மோட்டார் பழுது பார்க்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தார். ராஜேந்திரனுக்கு கவிதா என்ற மனைவி உள்ளார்.  
 இச்சம்பவம் குறித்து, பவானிசாகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments