ஸ்பிரிட் படத்துக்கு ஏ சான்றிதழ்தான் தருவார்கள்: சந்தீப் வங்கா
நடிகர் பிரபாஸ் நடித்துவரும் ஸ்பிரிட் படத்தின் அப்டேட் குறித்து...
பிரபல இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் ஸ்பிரிட் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நாயகியாக திரிப்தி டிம்ரி நடித்து வருகிறார்.
பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் டி சீரிஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு மார்ச் 5ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள்ள ரோமாஞ்சகம் எனும் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சந்தீப் வங்கா பங்கேற்றார். இந்தப் படத்தை வேணு கோபால் இயக்கியுள்ளார்.
Advertisement
Advertisement
காதல் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சுமந்த் பிரபாஸ், அனந்திகா சனில்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் பட விழாவில் பேசிய இயக்குநர் சந்தீப் வங்கா பேசியிருப்பதாவது:
வாரணாசி படத்தும் எங்கள் படத்துக்கும் இடையேயான இடைவெளி 37 நாள்கள் இருக்கின்றன. அது போதுமானது. வாரணாசி எங்கள் படத்தைவிட பெரியது.
நாம் என்னதான் முயற்சித்தாலும் ஸ்பிரிட் படத்துக்கும் தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ்தான் தருவார்கள். அதனால்தான் சொல்கிறேன், எங்கள் தயாரிப்பில் வரும் முதல் யு/ஏ படமான ரோமாஞ்சகம் படத்துக்கு குடும்பத்துடன் வாருங்கள் என்றார்.
Prabhas's Spirit To Get An A Certificate, Confirms Sandeep Reddy Vanga
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.