FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தேர்வு

நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாகத் தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 190 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.

Updated On : 25 மே 2018, 12:50 am IST
பகிர்:

நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாகத் தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 190 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வளாகத் தேர்வு முகாமுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். சென்னை தனியார் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் கோபிநாத் பங்கேற்று தேர்வை தொடக்கி வைத்துப் பேசியதாவது:
நிறுவனங்களுக்கு டிப்ளமோ பயிலும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுவதால் இந்த வாய்ப்பை கல்லூரி மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு வேலை வாய்ப்பைப் பெற வேண்டும் என்றார்.
இதில், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சார்ந்த சுமார் 190க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வில் பங்கேற்ற மாணவர்களை நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் எஸ்.ஆறுமுகம், செயலர்கள் எஸ்.நந்தகுமார் பிரதீப் மற்றும் எஸ்.திருமூர்த்தி, கல்லூரியின் முதல்வர் ரபிக்அகமது ஆகியோர் வாழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments