FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பண்ணைத் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்

பெருந்துறை வேளாண்மைத் துறையின் சார்பில், விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

பெருந்துறை வேளாண்மைத் துறையின் சார்பில், விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை ஒன்றியம், முள்ளம்பட்டி, கந்தாம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு, வேளாண்மை உதவி இயக்குநர் ரங்கநாயகி தலைமை வகித்தார். 
வேளாண்மை இணை இயக்குநர் குணசேகரன், ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்துக்கான விண்ணப்பத்தை விவசாயிகளுக்கு வழங்கினார். 
விழிப்புணர்வு முகாம் நடைபெறும் விவரம்:  7 ஆம் தேதி முற்பகல் திருவாச்சி ஊராட்சி மன்ற அலுவலகம், பிற்பகல் பெரியவிளாமலை ஊராட்சி மன்ற அலுவலகம், 8 ஆம் தேதி முற்பகல் சிங்கநல்லூர் மாரியம்மன் கோயில் வளாகம், பிற்பகல் பாண்டியம்பாளையம் நிர்வாக அலுவலக அலுவலகம், 10 ஆம் தேதி முற்பகல் நிச்சாம்பாளையம் அண்ணமார் கோயில் வளாகம், பிற்பகல் தோரணவாவி பால் உற்பத்தியாளர் சங்கம், 11 ஆம் தேதி முற்பகல் கள்ளாகுளம் செழியன் கூட்ட அரங்கம்,  பிற்பகல் துடுப்பதி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments