FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிஎஸ்கே - தோனி உறவில் விரிசல்? பங்குகளை வாங்க முயன்றதால் மனக்கசப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் பங்குகளை வாங்க முயன்ற தோனி முயற்சி தோல்வியடைந்தது பற்றி...

எம்.எஸ். தோனி - படம்: எக்ஸ் / சிஎஸ்கே
பகிர்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 25% பங்குகளை வாங்க அந்த அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி முயற்சித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

சென்னை அணிக்காக 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் தோனி பெற்றுக் கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

கடந்த 2023 ஆம் ஆண்டு இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். தொடர்ந்து அணியில் விளையாடிய தோனி, 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் காயம் காரணமாக ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை.

45 வயதாகும் தோனி, அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்திருக்கும் சூழலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை வாங்க அவர் முயற்சித்த செய்திகள் வெளிவந்துள்ளன.

கிரிக்ப்ளாக்கர் வெளியிட்ட செய்தியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் 25% சதவிகிதம் பங்குகளை வாங்க தோனி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவித்துள்ளது.

சென்னை அணி நிர்வாகமும் தோனியும் நடத்திய பேச்சுவார்த்தையில், முதலில் தோனி 25% கேட்டபோது, சென்னை நிர்வாகம் 3% கொடுக்க முன்வந்ததாகவும், பின்னர் தோனி 20%, 18% என குறைத்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சென்னை நிர்வாகம் இறுதியாக 5.5% பங்குகள் மட்டுமே கொடுக்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் வாய்மொழியாகவே நடைபெற்றதாகவும், எழுத்துப்பூர்வமாக எந்த பரிமாற்றமும் ஒப்பந்தமும் நடைபெறவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கிரிக்ப்ளாக்கருக்கு தெரிவித்துள்ளன.

இதனால் சென்னை அணி நிர்வாகத்துக்கும் தோனிக்கும் இடையேயான உறவும் மேலும் மோசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. தோனி மீண்டும் சிஎஸ்கே ஜெர்சியில் களமிறங்குவாரா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

ஐபிஎல் அணியின் பங்குகளை அணியின் வீரர் வாங்க முயற்சித்தது இது முதல்முறை அல்ல என்றும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தோனியின் சக வீரருமான ஒருவரும் அவர் சார்ந்த அணியின் பங்குகளை வாங்க முயன்று தோல்வியில் முடிந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

summary

Dhoni's attempt to buy CSK shares fails - What happened

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments