பூம்புகார் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விற்பனைக் கண்காட்சி
ஈரோட்டில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு விற்பனைக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.
ஈரோட்டில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு விற்பனைக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழக அரசின் கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்), அனைத்து ஏழைக் கைவினைஞர்களின் கைவண்ணத்தில் தயாரான படைப்புகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் விழாக் காலங்களில் சிறப்பு விற்பனைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
அதன் அடிப்படையில், ஈரோடு நகரில் மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு விற்பனைக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 6 முதல் 14 ஆம் தேதி வரை (ஞாயிறு உள்பட) நடைபெறவுள்ள இக்கண்காட்சியில், பஞ்சலோகம், பித்தளை, பேப்பர் கூழ், மண், வெள்ளெருக்கு வேர், மார்பில் பவுடர், மாவுக்கல், கருங்கல் போன்ற மூலப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், வெண்மரம், நூக்கமரம், கருப்பு உலோகம், வெள்ளை உலோகம், ஸ்படிக விநாயகர், தஞ்சாவூர் ஓவியம், கலை தட்டுகளில் செய்யப்பட்ட விநாயகர், பல்வேறு வகை வண்ண வடிவங்களில் விநாயகர் சிலைகள் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மேலாளர் ஜி.சரவணன் கூறியதாவது:
இக்கண்காட்சியில் ரூ. 60 முதல் ரூ. 1,00,000 வரை உள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் குறிப்பிட்ட பொருள்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், அனைத்து கடன்/பற்று அட்டைகளும் எவ்வித சேவைக் கட்டணமின்றி ஏற்றுக் கொள்ளப்படும். எனவே, இக்கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு விநாயகர் சிலைகளை வாங்குவதன் மூலம் கைவினைஞர்கள் வாழ்க்கைக்கு உதவிட முடியும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.