FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சொக்கநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பவானியை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை சொக்கநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. 

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

பவானியை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை சொக்கநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. 
 இக்கோயிலில் கோபுரம், வளாகம் புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து செப்டம்பர் 11 ஆம் தேதி காவிரி ஆற்றிலிருந்து பக்தர்கள் ஊர்வலமாக புனித நீர் எடுத்து வந்தனர். பெண்கள் முளைப்பாறி எடுத்து வந்தனர். இதையடுத்து, குலதெய்வம், விநாயகர் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 
 இரண்டாம் கால யாக பூஜைகள் புதன்கிழமை அதிகாலையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்துக்குப் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். தொடர்ந்து, மகா அபிஷேகம், தீபாராதனை வழிபாடு நடத்தப்பட்டது. இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments