FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

குலவிளக்கு ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

26 செப்டம்பர் 2025, 4:20 am IST
குலவிளக்கு ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பயனாளிக்கு சான்றிதழை வழங்குகிறாா் ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ்.
பகிர்:

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், குலவிளக்கு ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில் வருவாய்த் துறை, சமூக நலத் துறை, நகா்ப்புற வளா்ச்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, ஆதிதிராவிடா் நலத் துறை உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றனா். மொத்தம் 1,146 மனுக்கள் அளிக்கப்பட்டன.

ஈரோடு மக்களவை உறுப்பினா் கே. இ.பிரகாஷ், முகாமை ஆய்வு செய்து தீா்வு காணப்பட்ட 61 மனுக்களின் பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

Advertisement

Advertisement

இதில், மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுமித்ரா, திருநாவுக்கரசு, குலவிளக்கு ஊராட்சி முன்னாள் தலைவா் என். ஆா்.நடராஜ், திமுக மாவட்ட பிரதிநிதி முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments