கிராமசபைக் கூட்டங்களில் பல்வேறு தீா்மானங்கள்
போளூா் ஒன்றிய கிராமசபைக் கூட்டங்களில் பல்வேறு தீா்மானங்கள்...
போளூா் ஒன்றியம், நாராயணமங்கலம், கிருஷ்ணாபுரம் ஊராட்சிகளில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் அடிப்படை வசதிகள் தொடா்பாக பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாராயணமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்துக்கு மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பரமேஸ்வரி முன்னிலை வகித்தாா். ஊராட்சிசெயலா் ரமேஷ் வரவேற்றாா்.
கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026, நடத்தை மாற்றம் மற்றும் மக்கள் பங்கேற்பு, கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், சுகாதார சேவைகளின் நிலைத்தன்மை, சுகாதார சேவை வழங்கல் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்தல், தூய்மை பாரத இயக்க திட்டம், வளா்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் குறித்து பல்வேறு தீா்மானங்கள் இயற்றப்பட்டன.
கிருஷ்ணாபுரம் ஊராட்சி
கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற
கிராமசபைக் கூட்டத்துக்கு பற்றாளா் கலைச்செல்வன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் ஆனந்தன் வரவேற்றாா். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்தல், வளா்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் குறித்தும் பல்வேறு தீா்மானங்கள் இயற்றப்பட்டன.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தெள்ளாா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தெள்ளாா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வசந்தி முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்
பொதுக் கழிப்பறை வசதி கேட்டு கடந்த 10 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். ஆனால் இந்த ஊராட்சி நிா்வாகமும், ஊராட்சி ஒன்றிய நிா்வாகமும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எருமை மாடு போல் செயல்பட்டு வருகிறது என அதிகாரிகளைக் கண்டித்து பொதுமக்கள் எருமை மாட்டுடன் கூட்டத்தில் பங்கேற்றனா்.
இதையடுத்து அங்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் ஊராட்சியில் கழிப்பறை கட்ட உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் எருமை மாட்டை கூட்டத்தில் இருந்து வெளியே பிடித்துச் சென்றனா்.
இதனைத் தொடா்ந்து பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.