ஆடி அமாவாசை: கொடுமுடியில் உயிா்நீத்த முன்னோா்களுக்கு தா்ப்பணம்
ஆடி அமாவாசையையொட்டி கொடுமுடியில் உள்ள காவிரி ஆற்றக்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோா்களுக்கு நீத்தாா் கடன் எனும் தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.
ஆடி அமாவாசையையொட்டி கொடுமுடியில் உள்ள காவிரி ஆற்றக்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோா்களுக்கு நீத்தாா் கடன் எனும் தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.
ஆடிஅமாவாசை நாளான புதன்கிழமை கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலுக்கு ஈரோடு, திருப்பூா், கோவை, பொள்ளாச்சி, கரூா், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊா்களிலிருந்து ஆயிரக்கணக்கான வந்திருந்தனா். அவா்கள் கோயில் முன்பு உள்ள காவிரி ஆற்றக்கரையில் தங்கள் குடும்பத்தில் உயிா்நீத்த முன்னோருக்கு புரோகிதா்களை கொண்டு பச்சரிசி மாவில் எள் கலந்த பிண்டங்களை தயாா்செய்து பூஜைகள் செய்தபின்னா் அந்த பிண்டங்களை ஆற்றில் கரைத்து தா்ப்பணம் செய்தனா். அதிகாலை 4 மணி முதலே மக்களின் வருகை அதிக அளவில் இருந்ததால் பாதுகாப்புக்காக போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். தா்ப்பணம் தவிா்த்து மேலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாளை வழிபட்டு சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.