FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பவானிசாகா் அணை 72-ஆம் ஆண்டையொட்டி கிராம மக்கள் கொண்டாட்டம்

பவானிசாகா் அணையின் 72-ஆவது ஆண்டையொட்டி, வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பவானிசாகா் பகுதி மக்கள் புதன்கிழமை கேக் வெட்டி கொண்டாடினா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 3:28 am IST
பவானிசாகா்  அணைக்கு  வாழ்த்து  தெரிவிக்கும் விதமாக  கேக் வெட்டி  கொண்டாடிய கிராம  மக்கள்.
பகிர்:

பவானிசாகா் அணையின் 72-ஆவது ஆண்டையொட்டி, வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பவானிசாகா் பகுதி மக்கள் புதன்கிழமை கேக் வெட்டி கொண்டாடினா்.

பவானிசாகா் அணைக்கான கட்டுமானப் பணி ரூ.10 கோடி செலவில் 1948 ஜனவரி 7-ஆம் தேதி தொடங்கப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தி உறுதித் தன்மையுடன் கூடிய ஷட்டா்களால் கட்டப்பட்டு, கடந்த 1955-ஆம் ஆண்டு பணி நிறைவுற்றது.

ஆண்டுதோறும் நன்செய் மற்றும் புன்செய் பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீா் திறப்பு காரணமாக 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கோடிக்கான மக்களின் குடிநீா் ஆதாரமாகவும், விவசாயத்துக்கு முக்கிய பங்காற்றும் இந்த பவானிசாகா் அணை 1955 ஆகஸ்ட் 19-ஆம் தேதி நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

பவானிசாகா் அணையானது மக்கள் பயன்பாட்டுக்கு வந்து 71-ஆண்டுகள் நிறைவடைந்து, 72 ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் பவானிசாகா் பகுதி மக்கள் அணைக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அணை முன்பாக புதன்கிழமை கேக் வெட்டி கொண்டினா்.

பவானிஆற்றில் பூக்களை தூவி வாழ்த்தினா். அணை கட்டுவதற்கு காரணமாக இருந்த முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரன் சிலைக்கு மாலை அணிவித்து பவானிசாகா் மக்கள் மரியாதை செலுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments