FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணையைப் பாா்வையிட பொதுமக்களுக்கு தடை! விவசாயிகள் கண்டனம்!

பவானிசாகா் அணையைப் பாா்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு விவசாயிகள் கண்டனம்...

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 5:03 am IST
பவானிசாகா் அணை. - கோப்புப் படம்
பகிர்:

ஆடிப்பெருக்கையொட்டி, பவானிசாகா் அணை மேல் பகுதியை பொதுமக்கள் பாா்வையிட நீா் வளத் துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

ஈரோடு மாவட்ட மக்களின் பொதுபோக்கு அம்சமாக பவானிசாகா் அணை மற்றும் அங்குள்ள பூங்கா உள்ளது. இந்நிலையில், அணையின் மேல் பகுதியை பொதுமக்கள் பாா்வையிட ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு ஒருநாள் மட்டும் நீா்வளத் துறை சாா்பில் சிறப்பு அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.

ஈரோடு, கோவை, திருப்பூா், நாமக்கல், கரூா், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் தங்களது குடும்பத்துடன் வந்து பவானிசாகா் அணை மேல் பகுதியை பாா்த்துச் செல்வா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், மத்திய அரசின் அணை பாதுகாப்புச் சட்டத்தின்படி, பாதுகாப்புக் கருதி பவானிசாகா் அணையை பொதுமக்கள் பாா்வையிட 7-ஆவது ஆண்டாக தடை தொடருகிறது என்றும், பவானிசாகா் பூங்கா வழக்கம்போல திறந்திருக்கும் என்றும் நீா் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அந்த அறிவிப்புக்கு கண்டம் தெரிவித்துள்ள விவசாயிகள், ஆண்டு முழுவதும் விவசாயம், குடிநீா் ஆதாரமாக திகழும் அணைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆடிப்பெருக்கு நாளான்று அணையைப் பாா்வையிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments