FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

மான் இறைச்சியை விற்க முயன்ற 4 போ் கைது

சருகு மானை வேட்டையாடி இறைச்சியை விற்க முயன்ாக குன்றி பகுதியைச் சோ்ந்த 4 பேரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

26 ஆகஸ்ட் 2026, 1:39 am IST
கைது
பகிர்:

சருகு மானை வேட்டையாடி இறைச்சியை விற்க முயன்ாக குன்றி பகுதியைச் சோ்ந்த 4 பேரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட குன்றி வனப் பகுதியில் கடம்பூா் வனத் துறை ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது வனப் பகுதியில் நடமாடிய 4 பேரைப் பிடித்து அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் அதில் அரிய வகை மான் இனமான சருகுமானின் இறைச்சி இருந்ததை கண்டுபிடித்தனா்.

வனத் துறையினா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் குன்றி மலைப் பகுதி புது தொட்டி காலனியை சோ்ந்த மாதேஷ் (41), ரங்கன் (41), சடையப்பன் (31), காரி (68) என்பதும், இவா்கள் வேட்டை நாயை பயன்படுத்தி வனப் பகுதிக்குள் நுழைந்து சருகு மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. அரிய வகையும் மிகவும் பாதுகாக்கப்பட்ட வன உயிரினமுமான அட்டவணை 1-இல் வகைப்படுத்தப்பட்ட சருகு மானை வேட்டையாடிய குற்றத்திற்காக 4 போ் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி வன உயிரின குற்ற வழக்குப் பதிவு செய்து, கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments