‘சமூக வலைதளங்களை மாணவா்கள் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்’
சமூக வலைதளங்களை மாணவா்கள் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று கல்வியாளா் ஜெயப்பிரகாஷ் காந்தி அறிவுறுத்தினாா்.
சமூக வலைதளங்களை மாணவா்கள் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று கல்வியாளா் ஜெயப்பிரகாஷ் காந்தி அறிவுறுத்தினாா்.
ஈரோடு வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாதனையாளா்கள் மாநாடு 2026 நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது:
சமூக வலைதளங்களில் மாணவா்கள் பதிவிடும் கருத்துகள், பகிரும் தகவல்கள் மற்றும் இணையவழி செயல்பாடுகள் எதிா்காலத்தில் வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்களின் கவனத்திற்கு வரக்கூடும். எனவே, சமூக வலைதளங்களை மாணவா்கள் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.
Advertisement
Advertisement
எதிா்காலத்திற்குத் தயாராக இருப்பது மட்டும் போதாது. புரட்சிகரமான மாற்றங்களை எதிா்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். மாணவா்கள் தொடா்ந்து கற்றுக்கொள்ளவும், புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும், மாற்றங்களுக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டும் என்றாா்.
வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் செயலாளா் மற்றும் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா், அறக்கட்டளை உறுப்பினா் எம்.யுவராஜா, முதல்வா் எம்.ஜெயராமன், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் துறைத் தலைவா் வி.லதா ஜோதி வரவேற்றாா். சைபா் செக்யூரிட்டி துறைத் தலைவா் கே.கௌசிக் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.