ரயில் மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
சங்ககிரி அருகே ரயில் மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
சங்ககிரி அருகே ரயில் மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், சங்ககிரி கஸ்துாரிபட்டியைச் சோ்ந்தவா் ஸ்ரீரங்கன் மகன் முகேஷ் (18). சேலத்தில் உள்ள தனியாா் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். சில மாதங்களாக கல்லுாரிக்கு செல்லவில்லை.
கடந்த 28-ஆம் தேதி இரவு 11 மணிக்கு தன் வீட்டின் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முற்பட்டுள்ளாா். அப்போது அந்த வழியே வந்த ரயில் மோதியதில் படுகாயமடைந்து சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
Advertisement
Advertisement
அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுதொடா்பாக ஈரோடு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.